வியாழன், ஜனவரி 05, 2012

ராமர் பாலத்தைக் காப்பாற்ற உச்சநீதிமன்றம் முயற்சி?


இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும் என்று சொல்லப்படும் சேதுக்கால்வாய் திட்டம், கடந்த திமுக ஆட்சியின்போது மத்திய காங்கிரஸ் அரசினால் அடிக்கல் நாட்டப்பட்டு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
இதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து பலகோடி ரூபாய் செலவளித்த பிறகு இந்துத்துவா சக்திகளால் சேது சமுத்திர கால்வாய் திட்டப்பணிகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி நிற்கிறது.
இந்நிலையில் சேது சமுத்திரத்திட்டத்தை மாற்றுவழியில்
செயல்படுத்துவது தொடர்பாக, பிரதமர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்யும் படி, மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

"தனுஷ்கோடி வழியாக சேது சமுத்திரம் திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா?" என கேள்வி எழுப்பியுள்ளதோடு, எட்டுவாரங்களில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் உச்சநீதிமன்றமும் சேதுக்கால்வாய் திட்டத்தினால் ராமர் பாலத்துக்கு ஆபத்து என்ற கட்டுக்கதையை நம்புகிறதோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

- மயில்வாணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக