வெள்ளி, ஜனவரி 06, 2012

மொபைல் போனிலேயே ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி!


IRCTC Mobile Web Site ரயில் டிக்கெட்டுகளை மொபைல்போனிலேயே முன்பதிவு செய்து கொள்ளும் சேவையை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
ரயில் பெட்டியின் நீளத்தைவிட, ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய காத்திருக்கும் க்யூ நீளம் அதிகமாக இருக்கிறது. ஆன்-லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதிகள் இருந்தும் கால்கடுக்க காத்திருக்கும் நிலை இன்னும்
மாறவில்லை.
ஆன்-லைனில் டிக்கெட் புக் செய்தாலும், ப்ரின்ட் அவுட் எடுக்க ஒட வேண்டி இருக்கிறது. இந்த சிரமத்துக்கெல்லாம் குட்பை சொல்ல ஒரு புதிய வசதியை ஐஆர்சிடிசி துவங்கியுள்ளது.
இனி மொபைலிலேயே ரயில் டிக்கெட் புக் செய்யலாம். இதற்கு ப்ரின்ட் அவுட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைலில் டிக்கெட் புக் செய்த பின்பு கிடைக்கும் மெசேஜை டிடிஆரிடம் காட்டினால் போதும். ஆனால் கையில் ஐடி ப்ரூஃப் அவசியம்.
எனினும், மொபைல்களுக்காக ஐஆர்சிடிசி உருவாக்கியுள்ள இணையதளத்தில் புதிய முகவரியை உருவாக்கினால்தான் இந்த வசதியை பெற முடியும். முகவரி மற்றும் பாஸ்வேர்டை பெற்றவுடன் இந்த இணையதளத்துக்குள் சென்று ரயில் டிக்கெட்டை புக்கிங் செய்யலாம்.
வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் மார்க்கெட் வேகமாக வளர்ந்து வருவதால் ஐஆர்சிடிசியின் புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த வசதியை சிம்பையான், ஆன்ட்ராய்டு போன்ற இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனில் பெறலாம். இருந்த இடத்தில் இருந்தே வேலைகளை கச்சிதமாக செய்து முடிக்க ஒரு புதிய வசதியை ஐஆர்சிடிசி ஏற்படுத்தி கொடுக்க இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக