ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளின் வசதிக்காக, மூடப்பட்டுள்ள பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் சாலையை மீண்டும் திறக்க, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையில், நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில், பாக்., நாட்டைச் சேர்ந்த 24 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாக்., அப்பாதையை
மூடி விட்டது. இப்பாதை மூலமாக, பாகிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் உணவு, எண்ணெய், எரிபொருள் உட்பட பல அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்களில் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன.
பாதை மூடப்பட்டதால், போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால், ஆப்கன் நாட்டில் உள்ள படை வீரர்களுக்கு தேவைப்படும் மூன்றில் ஒரு பகுதி பொருட்கள் செல்வது தடைபட்டது. பாதையை பாக்., மூடியதால், அமெரிக்கா அதிருப்தி கொண்டது. இந்நிலையில், அமெரிக்காவுடனான நட்பு மேலும் சீர்குலைவதைத் தடுக்க, மூடப்பட்ட பாதையை மீண்டும் திறக்க, பாக்., முனைப்பு காட்டி வருகிறது.
மீண்டும் பாதை திறக்கப்பட்டாலும் கூட, உடனடியாக வாகன போக்குவரத்து நடைபெறாது. படிப்படியாகத் துவங்கும் வாகன போக்குவரத்து அனைத்தும், சோதனைச் சாவடிகள் வழியாகவே நடைபெறும். அப்பாதையை எப்போது திறப்பது என்பது குறித்த தேதி, இன்னும் முடிவாகவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக