
இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் வரை சவேஸ் உயிருடன் இருந்தால் அது அவர் செய்த பாக்கியம் என்று அவருக்கு நெருக்கமான மருத்துவர்கள் கூறியதாக தி டெய்லி மெயில் செய்தி வெளியிட்டடுள்ளது.
சவேஸின் பெருங்குடலின் ஒரு பாகம் மற்றும் புரோஸ்டிரேட் சுரப்பியை பாதித்த புற்றுநோய் தற்போது அவரது எழும்பு உள்பட உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளது என்று அவரது மருத்துவர்கள் தெரிவித்ததாக பிரேசில் நாட்டு பத்திரிக்கை வேஜா செய்தி வெளியிட்டுள்ளது.
கீமோதெரபி, ரேடியோதெரபி மற்றும் அறுவை சிகிச்சையால் பலனில்லை என்று மருத்துவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதமே சவேஸிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அவரை உடனடியாக ஐரோப்பாவில் உள்ள புற்றுநோய் மையத்தில் சேருமாறும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் புற்றுநோய் மையத்தில் சேர மறுத்துவிட்டார் என்று அந்த பத்திரிக்கை மேலும் தெரிவி்த்துள்ளது.
சவேஸ் பொது இடங்களில் கம்பீரமாக காட்சியளிக்கலாம். ஆனால் அவர் இன்னும் சில மாதமங்கள் தான் வாழ்வார் என்று மருத்துவர்கள் தெரிவி்த்துள்ளனர். தனது அதிபர் பணியில் குறிக்கிடும் எந்தவித சிகிச்சையையும் தான் எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்று சவேஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக