
ஆம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் விரைவு பேருந்து, சொகுசு பேருந்து இப்படி பல வகையாக பிரித்துள்ளனர். இதெல்லாம் நீண்ட தூரம் செல்லும் பஸ்களுக்கு பொருந்தும். மற்றபடி அனைத்து பஸ்களும் ஒன்றுதான். ஒரே கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால் தமிழகம் முழுவதிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் மக்களிடம் கொள்ளையடித்து வருவது வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.
பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் இயக்கப்பட்ட பிறகு அனைவரும் இந்த பஸ்ஸில் சென்றால் நேரம் குறைவதால் பயணிகள் இந்த பஸ்ஸில் செல்லவே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்ஸிற்காக தனி கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த நிலையில் பாயிண்ட் டூ பாயிண்ட் பெயரிலேயே எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டு பயணிகளிடம் 50 சதவீதத்திற்கு மேல் கட்டணம் வசூல் செய்வது எந்த விததத்தில் சரி என தெரிவில்லை.
உதாரணமாக ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலத்திற்கு அனைத்து பஸ்களும் ரூ.26 கட்டணம் உள்ளது. ஆனால் எக்ஸ்பிரஸ் என்று போர்டு மட்டும் போட்டுவிட்டு மிகவும் மோசமாக பஸ்ஸில் பயணம் செய்தால் இதே இடத்திற்கு செல்ல ரூ.35 வசூலிக்கப்படுகிறது.
இதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து கோயமுத்தூர் செல்ல சாதாரண பஸ்களில் பாயிண்ட் டூ பாயிண்ட் உட்பட ரூ.29 வசூலிக்கப்படுகிறது. ஆனால் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இதே இடத்திற்கு செல்ல ரூ.39 வசூலிக்கப்படுகிறது. (மீதம் ஒருரூபாய் கண்டக்டர் கொடுப்பதில்லை என்பது வேறுவிஷயம்).
இந்த கட்டணம் குறித்து எக்ஸ்பிரஸ் பஸ் கண்ணாடியில் எழுதியிருந்தால் கூட பயணிகள் கட்டணம் அதிகம் என அடுத்த பஸ்ஸில் செல்வார்கள். ஆனால் மக்களை ஏமாற்ற அதையும் செய்வதில்லை. பஸ்ஸில் பயணிகள் ஏறி பஸ் சென்றுகொண்டிருக்கும்போது கண்டக்டரிடம் டிக்கட் வாங்கும்போதுதான் இந்தகூடுதல் கட்டணம் பற்றிய தகவல் தெரியவரும்.
ஆகவே அரசு பஸ்களில் பயணிகளை இப்படி ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என்பதை ஆட்சியாளர்கள்தான் கூறவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக