செவ்வாய், ஜனவரி 10, 2012

தடை செய்ய பகவத் கீதையில் என்னதான் இ(ரு)றுக்கு?


பத்மாசுரன் நம் உறவாளி !
நரகாசுரன் ஒரு போராளி !
பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த
நம் பங்காளியை
பார்ப்பனீயம் தீர்த்துக் கட்டியதே- தீபாவளி!"

"அன்று மனு நீதி இன்று உச்ச நீதி
எட்டிப்பார்த்தால் பீனல் கோடுகள்...
தொட்டுப் பார்த்தால் பூணூல் கோடுகள்
பல்சருக்கும், பாய் கொடுக்கும் சீதனத்துக்கும்
மதம் மாறுவது - நாணயக்கேடாம்
கேவலம் அல்சருக்காக மதம் மாறிய
அப்பர் மட்டும் நாயன்மாராம்
சைவக் கொலைகள் பறந்தது சமணத் தலைகள்.

அசுரன் என்றால் ( தமிழன்) நம்மையே
அருவருப்பாய் பார்க்கின்றாய் ...
சுரா என்ற பார்ப்பன மதுவை குடிக்க மறுத்த
திராவிடப் பிரிவே அசுரன்
முதலில் சாராயம் குடித்த ஜாதி பார்ப்பன ஜாதி
முதலில் சாராயம் காய்ச்சிய ஜாதியும் பார்ப்பன ஜாதியே

முதலில் மாட்டுக் கரிக்குழம்பு கொதித்ததும்
ஆரிய பவன் தான் "புல மேயும் இளம் கன்றுக் குட்டியை"
நம் "பல்" எப்பெடி மேயவேண்டும் என்று
பாடி வைத்திருக்கிறான் யாக்ஞ்சவல்கியன்
அது மனுதர்மமா? இல்லை இல்லை
பார்பன ருசியின் "மெனு" தர்மம்

அவன் சாராயம் குடித்தால் அது "தீர்த்தம்"
நம்மா குடித்தால் "நாத்தம்"
"இந்துக்களே ராமனுக்கு கோயில் கட்ட வாருங்கள் "
என்று கூப்பிடும் ராம கோபாலா
இங்கிருக்கும் கோயிலுக்குள் முதலில்
பஞ்சமரை கூட்டிப்போ!

ராமர் பாலத்தை பாதுகாக்க வாருங்கள் என்று
ரூமர் கிளப்பும் இல. கணேசா
தேவாரத்தமிழில் நாங்கள்
தில்லையில் பாட வந்தால்
தமிழ் நீச பாஷை என்று பாடவிடாமல்
கபாலத்தை பிளக்கும் இனவெறி ஏனடா?

ராம கோபாலா! எங்கே உன் பி.ஜே பீ
கொடியங்குளத்தில் எங்கள் இந்துக் குடலை
சாதிவெறி உருவியபோது
எந்த சந்துக்குள்ளே ஒளிந்திருந்தே
சந்து கோபாலா ! இப்ப இந்து இந்து இந்துன்னு
எங்களை ஏன் கூப்பிடுரே?

மேல வளவு முருகேசு
வெட்டி சாய்க்கப்பட்டபோது
தட்டிக் கேட்க ஆளைக் காணோம் ...
எட்டிகூடப் பார்க்காத  இல. கணேசா !
இப்ப ராமன் பாலம் காப்பாத்த
உன்கூட இந்துவாக வருவதற்கு
நாங்க என்ன லூசா?

காத்தவராயன் ஆரியமாலா
கதை இன்னும் முடியவில்லை
காதல் பண்ணிய கண்ணகியையும்
காதலித்த தலித் முருகேசனையும்
கட்டாயமாக விஷம் வைத்துக்கொன்ற
சாதிவெறியை கண்டிக்க
எந்த முன்னணியையும் காணோம்.

அடுப்பில் வருக்கப்பட்டது ஆசீவகம்
சட்டியில் சுருக்கப்பட்டது சார்வாகம்
கழுத்து முறிக்கப்பட்டது பவுத்தம்
கழுவில் ஏற்றப்பட்டது சமணம்
உயிருக்கு பயந்து காட்டுக்குள் ஓடினார்கள் சித்தர்கள்
நெருப்பில் பொறிக்கப்பட்டது சேரி !

சாமி கும்பிடப்போன நந்தன்
சாம்பலாக வெளியே வந்தான் !
குகைக்குள் போன பழனி போகர்
திரும்பவே இல்லை ! வரலாற்றில் ஒரு பார்ப்பான் கூட
ஜோதியில் கலந்ததே இல்லை !?
என்னகொடூரம்! பார்ப்பனக் கவுச்சியில்
மூச்சு திணறிய காற்றும் சொல்லும்
வர்ணாசிரம ரத்த வாடையை....

காரியம் நடக்க ராமன் கதை விட்ட ஆரியம்
இப்போது தோரியம் கெட்டுவிடும்
தோண்டாதே என்கிறது
தோரியம் இல்லை - அங்கே
ஆரியம் கெடுகிறது என்று
ஆர் .எஸ். எஸ் அடிவயிறு எரிகிறது
எய்ட்ஸ் ஆர் .எஸ். எஸ்
இரண்டும் ஆபத்து உள்ளுக்குள் விட்டால் உயிரின்
எதிர்ப்பு குறைந்துவிடும்
உள்ளே விட்டதனால் இதோ
உருக்குலைந்து தமிழ் நாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக