ஞாயிறு, ஜனவரி 15, 2012

ஏர் இந்தியா விவகாரம்: விரைவில் சிக்கல் தீர்க்கப்படும் - அஜித் சிங் நம்பிக்கை


ஏர் இந்தியா நிறுவனம் விமானிகளுக்கு கடந்த 4 மாதங்களாக சரிவர கம்பளம் கொடுக்கவில்லை .இதனையடுத்து இன்று காலை  விமான சீனியர் விமானிகள் உடம்பு சரியில்லை என கூறி  விடுமுறையில் சென்றனர் . இதனால் டெல்லியில் 14 விமானங்களும் மும்பையில் 2 விமானங்களும், சென்னையில் 3 விமானங்களும் ரத்து செய்யபட்டன இதனால் விமான பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
 
இது குறித்து  சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங் கூறியதாவது:  ஏர் இந்தியா நிதி நெருக்கடியில்  இருக்கிறது 18 விமானிகள் நோய் என கூறி விடுமுறை எடுத்துள்ளனர் . இதனால் டெல்லி,மும்பை ,சென்னை உட்பட பிற விமான நிலையங்களில்   20 விமானங்கள்    ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
சில ஏர் இந்தியா விமானிகள்  உடம்பு சரியில்லை என தெரிவித்துள்ளனர் . ஏர் இந்தியா  நிதி நிலைமை மிக மோசமாக இருக்கிறது.  அதிக கடன் சுமையில் தான் உள்ளன என்பது  அரசாங்கத்திற்கு  தெரியும். இது குறித்து அடுத்து செவ்வாய் கிழமை  நான் நிதி மந்திரியை சந்திக்க உள்ளேன் . நிலைமையை  ஒரு நாளில் தீர்க்க முடியாது.ஊழியர்கள் பிரச்சனை எனக்கு புரிகிறது. இந்த நிலைமையை சரிசெய்ய வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது என்றார்.
 
இந்நிலையில் ,டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் நடந்த விமானிகள் பொதுக்கூட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட  முடிவு செய்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
முன்னதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதியிலிருந்து மே 6 ஆம் தேதி வரை சராசரியாக 800 விமானிகள் தங்களுக்கு சரிவர  ஊதியம் வழங்கவில்லை என  10 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால்   ரூ. 200 கோடி இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக