வெள்ளி, ஜனவரி 06, 2012

புதுவருடத்தன்று சாதனை படைத்த இங்கிலாந்து (குடி)மகன்கள் !


கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடத்தன்று பிரித்தானியாவில் இடம்பெற்ற விருந்துகள், களியாட்ட நிகழ்வுகளில் குடிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் மொத்தமாக சேகரிக்கப்பட்டு மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறுவகையான மது வகைகளையும் ரசித்து ருசித்து குடித்து சாதனை படைத்துள்ளார்கள் பிரித்தானிய மக்கள்.
பிரிட்டனின் மிகப்பெரிய கண்ணாடி மறுசுழற்சி மையமான Bristol பிரதேசத்தில் உள்ள
Eastville எனும் இடத்தில் மதுப் போத்தல்கள் மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளன.
13,350 டன் எடையுள்ள போததல்கள் அங்கே உள்ளன.
முக்கியமாக சம்பெயின், வைன், பியர் போன்ற மதுபானங்கள் அதிகமாக பிரித்தானிய மக்களால் வாங்கி பயன்படுத்தப்பட்டுள்ளன.
500 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் பெறுமதியான சரக்குகள் இம்முறை விற்றுத் தீர்ந்தனவாம்.
போத்தல்கள் மறுசுழற்சி மூலம் திரும்பவும் பயன்படுத்தப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக