வியாழன், ஜனவரி 12, 2012

மீண்டும் அமெரிக்க விமானம் குண்டுவீச்சு - பாகிஸ்தானில் நால்வர் பலி !


பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் அமெரிக்காவிற்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்று குண்டு வீசியதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் ஜியோ சேனல் தெரிவிக்கிறது.அந்த ஆளில்லா விமானத்திலிருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அதனால் அந்த வீடு தீப்பிடித்து
எரிந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த கிராமவாசி கூறியிருப்பதாக ஜியோ சேனல் குறிப்பிட்டுள்ளது.
இதனால் அந்த வீட்டில் இருந்த 4 பேர் உடல் கருகி பலியாகி இருப்பதாகவும், இறந்தவர்கள் யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் ஜியோ சேனல் கூறியிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் பகுதியில் அமெரிக்க விமானம் குண்டு வீசித் தாக்கியதில் 24 பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு இந்த ஆண்டில் முதல் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக