எகிப்தில் பாராளுமன்றத்தின் கீழ் சபையின் 498 ஆசனங்களுக்கான மூன்றாம் சுற்று தேர்தல் நேற்று செவ்வாய் கிழமைஆரம்பமாகி இன்றும் இடம்பெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு சுற்று தேர்தல்கள் முடிவுற்றுள்ளது. இடம்பெற்ற இரண்டு சுற்றுத் தேர்தல்களிலும் இஸ்லாமிய கட்சிகள் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தியுள்ளது. நீதிக்கும்
சுதந்திரதிற்குமான கட்சி- கூட்டணியாக- 160 வரையான ஆசனங்களையும் அன் நூர் 83 வரையான ஆசனங்களையும் கைப்பற்றி உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது .கீழ் சபைக்கு 498 உறுப்பினர்கள மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள் மேலும் 10 உறுப்பினர்கள் இராணுவ நிர்வாகம் நிர்வாகத்தால் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றுவாக்கெடுப்பில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்று தேர்தலை தவிர்க்க கட்சியொன்று 50 சதவீத வாக்குகளைப் பெறுவது அவசியமாகும்.
பாராளுமன்றத்தின் குறைந்த அதிகாரம் கொண்ட மேல் சபைக்கான 270 உறுபினர்களை தெரிவு செய்வதகான தேர்தல் எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதன் உறுப்பினர்களில் 180 பேர் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படுவர் இவர்களில் 90 உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தல் மூலம் தெரிவாகும் ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக