புதன், ஜனவரி 04, 2012

காமன் வெல்த் ஊழல் வழக்கு: 5 பேருக்கு ஜாமீன் மறுப்பு !


காமன் வெல்த் ஊழல் வழக்கு: 5 பேருக்கு ஜாமீன் மறுப்புகாமன் வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடைபெற்ற ஊழல் தொடப்பான வழக்கில் ஒருங்கிணைப்பு குழு செயலாளர் லலித் பனொத், உதவி இயக்குனர் ஏ.எஸ்.வி.பிரசாத், ஒருங்கிணைப்பு குழு முன்னாள் டைரக்டர் ஜெனரல் சுர்ஜித் லால், முன்னாள் நிதி பாதுகாவலர் எம். ஜெயசந்திரன், ஹைதராபாதை சேர்ந்த கட்டுமான மேம்பாட்டாளர் ஏ.கே.ரெட்டி ஆகிய 5 பேரின் ஜாமீன் மனுவை  டெல்லி நீதிமன்றம் இன்று  நிராகரித்தது.
 
மேலும் ,நீதிபதி தல்வந்த் சிங் தலைமையில் நடைபெற்று வரும் இந்த விசாரணை இனி தினமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது . இதற்கு மறுப்பு தெரிவித்த வக்கீல்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கும் தினசரி நடைபெறுவதால் தங்களுக்கு நேரம் ஒதுக்குவது கடினம் என கூறினர்.
 
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்த பின்னர் தினசரி விசாரணை நடத்த அனைவருக்கும் ஏற்ற  நேரம் அறிவிக்கப்படும். 2ஜி வழக்கைவிட இந்த வழக்கு முக்கியத்துவம் குறைந்தது இல்லை. இந்த   நீதிமன்றத்தின் பணிசுமையை குறைக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் கோரியுள்ளதாகவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக