ஞாயிறு, ஜனவரி 15, 2012

பூமியின் சுற்று சூழலை குளிர்மையாக்கும் புது மூலகம் கண்டுபிடிப்பு !


பூமியின் வளி மண்டலத்தை குளிர்மையாக வைத்திருக்கும் புதிய மூலகம் ஒன்று அதன் சுற்று சூழல் வெளியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதல் பாரிய பிரச்சனையாக மாறியுள்ள இன்று இம் மூலகம் இதை தணிக்கும் செயற்பாடில் முக்கிய பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வளி மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்
கூடிய சூரியனின் அல்ட்ரா வயலெட் கதிர்களை தடுக்கும் புவியின் ஓஸோன் மண்டலத்துக்கு அடுத்த முகில் படையில் இம்மூலகம் அங்கம் வகிக்கின்றது. 

மேலும் வளி மாசடைவதை ஏற்படுத்தும் நைட்ரஜன் டைஒக்ஸைட் மற்றும் சல்ஃபர் டைஒக்ஸைட் ஆகிய வாயுக்களை இம்மூலகம் தாக்கி முகிலின் மீது படரும் நடுநிலை மூலகங்களாக மாற்றுகிறது. இதனால் புவியின் வெப்பம் குறைவடைகிறது. 

கடல் மட்டங்கள் உயர்தல் பனி உருகுதல் ஆகிய அழிவை ஏற்படுத்தும் விளைவுகளை உண்டாக்கும் புவி வெப்பம் சென்ற நூற்றாண்டை விட இந்த நூற்றாண்டு 0.8 டிக்ரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. ஆனால் 2 டிகிரி செல்சியஸிற்கு குறைவாக இவ்வித்தியாசம் இருப்பதனால், தற்போதைக்கு இதனால் பெரிய பாதிப்பு இல்லை என விஞ்ஞானிகள் கூறுவது ஆறுதல் அளிக்கும் செய்தி.

கடந்த வியாழக்கிழமை, அமெரிக்காவில் வெளியான விஞ்ஞான நாவல் ஒன்றில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் படி மென்செஸ்டர் மற்றும் பிரிஷ்டல் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கூட்டாக இணைந்து அமெரிக்காவிலுள்ள சான்டியா சர்வதேச ஆய்வுகூடத்தில் இவ்வாராய்ச்சியை மேற்கொண்டனர். 

இம்மூலகம் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடலில் அதிகமாக காணப்படும் கார்பன் சங்கிலியில் அடங்கியிருப்பதை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். க்ரியெகீ பிராடிக்கல்ஸ் என அழைக்கப் படும் இம்மூலகம் இயற்கையிலுள்ள தாவரங்களில் இருந்து வெளிப்படும் அல்கீன்ஸ் மற்றும் இரசாயன துணிக்கைகளில் காணப்படுகின்றது.

மிகவும் செறிந்த பச்சைத் தாவரங்களில், அல்கீன்களும் பச்சை வீட்டு வாயுக்களும் (நைட்ரஜன் டைஒக்ஸைட் மற்றும் சல்ஃபர் டைஒக்ஸைட்) அதிகமாக தாக்கமுறும் சுற்று புறத்தில், சூழல் மிக குளிராக இருப்பதும் இதனால் தான்.

இப்புதிய மூலகம் ஆய்வு கூடத்தில் சூரிய ஒளியை விட 100 மில்லியன் மடங்கு அதிகமான ஒளிக்கற்றைகளை பயன்படுத்தியே அவதானிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.

இம்மூலகம் நன்கு அவதானிக்கப் பட்ட போதும் புவி வெப்பத்தில் குறிப்பிட்ட அளவு தாக்கத்தை குறைப்பதற்கு, எத்தனை மூலக்கூறுகள் இணைய வேண்டும் என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக