வாஷிங்டன் : அமெரிக்காவில் கடும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக ஏராளமானோர் வேலை இழந்து வருகின்றனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் முடிந்த பிறகு இதுபற்றி கணக்கெடுக்கும்போது, வேலையில்லா திண்டாட்டம் மீண்டும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
வேலை இல்லாதவர்களுக்கான காப்பீடு தொகையை கேட்டு 3.99 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.
இதையடுத்து, வேலைவாய்ப்பு தொடர்பான கொள்கைகளில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்புகளை குறைத்து உள்நாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமாறு அமெரிக்க நிறுவனங்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். உள்நாட்டினருக்கு அதிகம் வேலைவாய்ப்பு வழங்காத அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு வரி சலுகைகள் நிறுத்தப்படும் என்றும் எச்சரித்த அவர் இதுகுறித்த அறிவிப்புகள் ஒரு சில வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். பணிகளை வெளிநாடுகளில் செய்து பெற்றுக் கொள்ளும் ‘அவுட்சோர்சிங்‘ நிறுவனங்கள் இதனால் கலக்கம் அடைந்துள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக