கடலூர் மாவட்டத்தை தானே புயல் புரட்டிபோட்டு 5 நாட்களாகிறது. வீடுகளை இழந்த மீனவர்களும், கிராமங்களில் வீடுகளையும், விவசாய நிலங்களில் பயிர்களையும் இழந்த சோகத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. 5 நாட்களாகியும் மின் சப்ளை, குடிநீர் விநியோகம் இல்லை. கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்தும் இல்லை. இதனால்
கிராமங்களில் பரிதாப நிலை தொடர்கிறது.
வங்கக் கடலில் தானே புயல் உருவானதும் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உட்பட கடலோரப் பகுதிகளில் மழை கொட்டத் தொடங்கியது. புயல் வலுவாகி பலத்த காற்றுடன் கடந்த டிசம்பர் 30ம் தேதி அதிகாலை புதுச்சேரி, கடலூர் இடையே கரை கடந்தது. பலத்த காற்று வீசியதாலும் மழையாலும் புதுச்சேரி, கடலூர் மாவட்டத்தையே புயல் சூறையாடிவிட்டது. கடலோரப் பகுதியில் ஏராளமான மீனவ கிராமங்களில் குடிசை வீடுகள் இடிந்துவிழுந்தன.
மரங்கள் அதிக அளவில் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், டிரான்பார்மர்கள் உடைந்து விழுந்தன. இதனால், மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. சாலைகளில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. விவசாய பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. முந்திரி, வாழை, சவுக்கு மரங்கள் எல்லாம் சாய்ந்தன. இப்படி மக்களின் வாழ்வாதாரத்தையே புயல் புரட்டிபோட்டு 5 நாட்களாகிறது.
இன்னும் கிராமங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. மின்சாரம் இல்லாததால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மின்சாரம் இல்லாததால் குழாய்களில் குடிநீர் சப்ளையும் இல்லை. சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவதில் காலதாமதம் ஆவதால் கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியும் இல்லை. இதனால், கிராமங்களில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கி போயுள்ளது. குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, அத்தியாவசியப் பொருட்கள் சப்ளை ஆகியவற்றை போர்கால அடிப்படையில் சீரமைக்க கோரி நேற்று மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் நடந்துள்ளது.
கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், வடலூர், குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு உட்பட 80 சதவீத கிராமப் பகுதிகளில் 5வது நாளாக தொடர்ந்து மின்தடை நீடிக்கிறது. குடிநீர்: இதனால் குடிநீர் வினியோகமும் இல்லை. குடிநீர் கிடைக்காததால், கடலூரில் நேற்று திருப்பாதிரிப்புலியூர், பாதிரிக்குப்பம், கோண்டூர், புதுப்பாளையம் பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கிராமங்களில் ரேஷன் முறையில் குடிநீர் சப்ளை செய்ய திருச்சி, சென்னை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் குடிநீர் கொண்டுவந்து வினியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும், எல்லா கிராமங்களிலும் போதிய அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழ்நிலையே நிலவுகிறது. குடிநீர் டேங்கர் லாரி வராததை கண்டித்து நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், சி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து: ஆங்காங்கே விழுந்துள்ள மரங்களை வெட்டி உடனடியாக அப்புறப்படுத்தப்படாததால் கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடலூர், வடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பணிமனைகளில் டிரைவர்கள் வராததால் பஸ்கள் இயக்கப்படவில்லை. கிராமங்களில் இயல்புநிலை இன்னும் திரும்பவில்லை.
* புதுச்சேரி & கடலூர் இடையே கடந்த டிசம்பர் 30ம் தேதி அதிகாலை தானே புயல் கரை கடந்தது.
* புயல் தாக்கி 5 நாட்களாகியும் கிராமப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
* மின்சாரம் இல்லாததால் குடிநீர் சப்ளையும் முடங்கிவிட்டது. சாலைகளில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
* அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
* லாரிகளில் ரேஷன் முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக