திங்கள், பிப்ரவரி 06, 2012

யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவத் தயார்.சீனப் பிரதமர் !

We will ready to solve the euro problem said Chinese Prime Minister.யூரோ மண்டலத்தில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகளை கடனில் இருந்து மீட்க, உதவ தயாராக இருப்பதாக, சீனா மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் சீனா, 3.2 டிரில்லியன் டாலர் (1டிரில்லியன்-1 லட்சம் கோடி; ஒரு டாலர்-49 ரூபாய்) அளவிற்கு முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டில் கால்
பங்கு யூரோ கரன்சியில் உள்ளது.
சமீபத்தில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சீனாவிற்கு வந்திருந்த போது, சீனப் பிரதமர் வென் ஜியாபோ அளித்த பேட்டியில், "ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பு(இ.எப்.எஸ்.எப்.,) மற்றும் "யூரோப்பியன் ஸ்டெபிளிட்டி மெக்கா னிசம்' (இ.எஸ்.எம்.,) ஆகிய அமைப்புகளின் மூலம், ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியில் சீனாவின் உதவியை அதிகரிப்பது குறித்து, ஆலோசித்து வருகிறோம்' என்றார்.ஐரோப்பிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், தற்காலிகமாக உருவாக்கப்பட்ட இ.எப்.எஸ்.எப்., அமைப்பிற்குப் பதிலாக, இந்தாண்டு ஜூன் மாதம் முதல் இ.எஸ்.எம்., அமைப்பு, 500 பில்லியன் யூரோ (1 பில்லியன் - 100 கோடி; 1 யூரோ - 65 ரூபாய்) நிதிமூலதனத்துடன் துவக்கப்பட உள்ளது.

யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடியில் உதவ தயாராக இருப்பதாக, சீனா முன்பே கூறியிருந்தாலும், எந்தெந்த வகைகளில் உதவ போகிறது என்பதைப் பற்றி கூறவேயில்லை. அதோடு, கிரீஸ் போன்ற நாடுகளின் பிரச்னைகள் தீர்க்கப்பட்ட பின்பே, தனது உதவியை பற்றி கூற முடியும் எனவும் தெரிவித்திருந்தது.இந்நிலையில், நேற்று சீனப் பிரதமர் வென் ஜியாபோ அளித்த பேட்டியில், இதுகுறித்து கூறியிருப்பதாவது:

ஒரு பக்கம் சீனாவின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையாக, ஐரோப்பா உள்ளது. மறுபக்கம், ஐரோப்பாவில் இருந்து சீனா அதிகளவில் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்து வருகிறது. இந்த அடிப்படையில், ஐரோப்பாவிற்கு உதவுவது சீனா வின் நலன் கருதி தான் என்பதை உணர முடியும்.ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை என்பது இருதரப்பினது ஸ்திரத் தன்மையையும், பேணுவதாக இருக்க வேண்டும். அதில், ஏதாவது சில மாற்றங்கள் இருக்குமானால், அது தடைகளை உண்டு பண்ணுவதை விட வர்த்தகத்தை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்.இவ்வாறு ஜியாபோ தெரிவித்தார்.ஆனால் வழக்கம்போல் இம்முறையும், எவ்விதத்தில் சீனாவின் உதவி இருக்கும் என, ஜியாபோ தெளிவுபடுத்தவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக