திங்கள், பிப்ரவரி 06, 2012

யூரோ கரன்சி அமைப்பில் இருந்து கிரீஸ் வெளியேற கருத்துக்கணிப்பில் ஆதரவு !

Greece will be out from Euro currency.ஐரோப்பிய யூனியனில் மொத்தம் 27 நாடுகள் உள்ளன. இவற்றில் 17 நாடுகள் மட்டுமே யூரோ கரன்சியைப் பயன்படுத்துகின்றன. இந்த நாடுகள் தான், யூரோ மண்டலம் என அழைக்கப்படுகின்றன.
இவற்றில் ஒன்றான கிரீசின் பொருளாதார நிலைமை தற்போது அதலபாதாளத்தில் உள்ளது. கடன் நெருக்கடி காரணமாக அந்நாடு யூரோ கரன்சியில் இருந்து விலகி,
தனது முந்தைய கரன்சிக்குத் திரும்பி விடுமென எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து ஜெர்மனியில் சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில், 53 சதவீதம் பேர், யூரோ கரன்சி அமைப்பில் இருந்து கிரீஸ் வெளியேறிவிட்டால் அந்த அமைப்பிற்கு நல்லது எனக் கூறியுள்ளனர். 34 சதவீதம் பேர் கிரீஸ், யூரோ கரன்சியில் தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

1 கருத்து:

  1. entha karansiyil thodarnthalum oru sariyana porulathara kolgaiyai pinpatramal porulathara alivai nirutha mudiyathu,mudiyumanal america than dollarai matra vendi irukkum,ithu verum karansi sambanthapatta visayam mattumalla annattin porulathara kolgai sambanthapatta visayamagum.vatti muraiyai pinpatrum varai,ivargal entha karansikku marinalum palan illai.

    பதிலளிநீக்கு