திங்கள், பிப்ரவரி 06, 2012

பிரிட்டனில் கடும் பனிப் பொழிவு. ஐரோப்பிய விமானச் சேவைகள் ரத்து !

British airlines are cancel because of heavy snow.
பிரிட்டனில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதால், ஐரோப்பாவிற்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், இந்திய விமானச் சேவை ரத்து செய்யப்படவில்லை.ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் இந்தாண்டு எதிர்பார்த்ததை விட, கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. 

பிரிட்டனின் சில இடங்களில் 16 செ.மீ., வரை பனி பொழிந்துள்ளது. நிலைமை இதை விட மோசமாகும் என,வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக, பிரிட்டனில் இருந்து ஐரோப்பா வின் பல பகுதிகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.எனினும், இந்தியாவிற்கான விமானச் சேவைகள் எதுவும் ரத்து செய்யப்பட வில்லை. மோசமான வானிலை காரணமாக, லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் குறைவான விமானங்களே இயக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேபோல், இத்தாலி தலைநகர் ரோம், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் ஆகியவற்றில் இருந்து லண்டன் செல்லும் விமானங்களும் ரத்தாகியுள்ளன.ஐரோப்பாவின் பல பகுதிகளில், வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக உள்ளது. இந்தக் கடும் பனிப் பொழிவு காரணமாக, ஐரோப்பாவில் இதுவரை 100 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக