சென்னை: பஸ் டே கொண்டாடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆண்டு தோறும் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் சென்னையில் பஸ் டே கொண்டாடுவது வழக்கமாக இருந்தது. இந்த கொண்டாட்டத்தினால அசம்பாவிதங்கள் ஏற்படுவதாக வந்த புகார்களின் பேரில் பஸ் டே கொண்டாடுவதற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற தடையை மீறி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பஸ் டே கொண்டாடியதில் கலவரம் வெடித்தது. இக்கலவரத்தில், போலீசார் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், பஸ் கண்டெக்டர் மற்றும் வக்கீல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பஸ் டேக்கு தடை விதிக்க மனு கொடுத்தனர். இதனையடுத்து, விதியை மீறி பஸ் டே கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக