மதுரையில் வெளிநாட்டு கம்பெனிகளின் பெயரில், குழந்தைகள் நலத்திற்கு கேடான போலி மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில், "கடைகளில் விற்கும் பாக்கெட் பொருட்களின் தரம் சந்தேகத்தை கிளப்புவதாக,' ஒருவர் மனு அளித்தார்.
மதுரை லட்சுமிபுரம் "ஷெரின் டிரேடர்ஸ்' கடையில் ஆய்வு செய்த போது, சில சாக்லெட் பொருட்கள் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. விசாரிக்கையில், தாய்லாந்து, இந்தோனேஷியா, சவுதி அரேபியா, பிலிப்பைன்ஸ் போன்ற நிறுவனங்களின் போலி முகவரியில், சாக்லெட், ஜெல்லி, கேண்டி மிட்டாய்கள் விற்றது தெரியவந்தது. சில பொருட்களில் தயாரிப்பு முகவரி இல்லை. அங்கிருந்த, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போலி வெளிநாட்டு மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் சிலவற்றை, உணவு ஆய்வகத்திற்கு அனுப்பினர்.
கடைக்காரர் கொடுத்த தகவல் படி, மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, மேலூர், தெற்குத்தெருவில் போலி மிட்டாய்கள் தயாரிக்கப்படுவதும், மதுரை முழுவதும் விற்பனையில் இருப்பதும் தெரியவந்தது. குழந்தைகளுக்கு பொருட்கள் வாங்கும் போதும், கடைகளுக்கு குழந்தைகளை அனுப்பும் போதும், பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகுணா கூறியதாவது:மதுரையில் போலி மிட்டாய்கள் விற்பனைக்கு வந்துள்ளது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். போலி மிட்டாய்களை கடைகளுக்கு சப்ளை செய்வோர், பில் தருவதில்லை. இதனால், அவர்களை ரகசியமாக நெருங்க வேண்டியுள்ளது. விரைவில் அவர்கள் பிடிபடுவர், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக