செவ்வாய், பிப்ரவரி 14, 2012

பெங்களூரு பலான அமைச்சர்கள்மீது கிரிமினல் வழக்குப்பதிவு !

 கர்நாடக சட்டப்பேரவை நடந்து கொண்டிருந்தபோது ஆளும் கடியான பா.ஜ.க அமைச்சர்கள் மூவர் பலான படம் பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தை மட்டுமின்றி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து அவர்களின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டது. பலான முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.



பெங்களூரு வழக்கறிஞர் தர்மபால்கவுடாவினுடைய மனுவை ஏற்று பெருநகர நீதிமன்ற நீதிபதி கிரன் முன்னாள் அமைச்சர்களான லட்சுமண், சி.சி.பாட்டீல், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது பிப்ரவரி 27 ஆம் தேதிக்குள் வழக்கு பதிவு செய்ய நீதிபதி ஆணையிட்டுள்ளார். விதான்சவுதா போலீஸ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பலான பாஜக முன்னாள் அமைச்சர்கள் மூவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடகத்தில் வலுத்துள்ள நிலையில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக