செவ்வாய், பிப்ரவரி 14, 2012

பா.ஜ.க. அறிக்கையில் ராமர்கோவில்- நீக்கவேண்டி சாதுக்கள் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிப்பு !

   லக்னோ : பிஜேபி தன் தேர்தல் அறிக்கையில் இருந்து ராமர் கோவிலை கட்டுவோம் என்ற வாக்குறுதியை நீக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சாதுக்களின் அமைப்பான சந்த் மகாசபை அறிவித்துள்ளது.  இது தொடர்பாக தேர்தல் கமிஷனை சாதுக்களின் குழுவான சந்த மகாசபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதுக்கள் சந்தித்தனர். தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் பிஜேபி தன் தேர்தல் அறிக்கையில் ராமர் கோவிலை கட்டுவோம் என்று அறிவித்துள்ள வாக்குறுதியை நீக்க வேண்டும் என்று கோரும் மனுவை அளித்ததாக சந்த மகாசபையின் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் கூறினார்.

பி.ஜே.பி அவ்வாறு நீக்காவிட்டால் பி.ஜே.பியின் தேர்தல் அறிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக கூறிய ஆச்சார்யா இன்று இரவுக்குள் அப்படி நடக்காவிட்டால் தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்றும் கூறினார்.

ராமர் கோவில் பிரச்னை அரசியலாக்கப்பட கூடாது என்ற ஆச்சார்யா இப்பிரச்னை உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் இதை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் ஆச்சார்யா கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக