
வெடித்து சேதமடைவதற்கு முன், இந்த டொயோட்டா "இன்னோவா' காரை, அவுரங்கசீப் சாலையில் இரண்டு இளைஞர்கள் பைக்கில் பின் தொடர்ந்து வந்தனர். கார் சிக்னலில் நின்றபோது, அவர்கள் காரின் பின்பகுதியில் வைத்த பொருள் தான், வெடித்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக சம்பவத்தை பார்த்த மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கார் சிக்னலில் நின்றபோது, வெடி பொருளை வைத்த இளைஞர்கள் உடனே அங்கிருந்து சென்று விட்டனர். காரில் காஸ் நிரப்பும் போது கார் வெடித்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், இந்த கார் எரிவாயுவில் இயங்கவில்லை என, போலீசார் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக