
ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் மேற்கத்திய நாடுகள் பிரச்சாரம் நடத்திவரும் வேளையில் சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் தலைவர் கூறிய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஈரானின் தூதரக அதிகாரிகளுடன் அமானோ நல்லிணக்க பேச்சுவார்த்தையை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் அமானோவுடன் ஐ.எ.இ.எ துணை இயக்குநர் ஹெர்மன் நக்கேர்ட்சும் பங்கேற்றார். அண்மையில் நக்கேர்ட்ஸின் தலைமையிலான ஐ.எ.இ.எ குழு ஈரானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக