ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

மோடி அரசும், எஸ்.ஐ.டியும் ஆதாரங்களை அழித்துவிட்டனர்: சஞ்சீவ் பட் குற்றச்சாட்டு !

சஞ்சீவ் பட்அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்களை குஜராத் மாநில அரசும், சிறப்பு விசாரணைக்குழுவும் சேர்ந்து அழித்துவிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றம் சாட்டியுள்ளார் குஜராத் இனப்படுகொலை தொடர்பாக விசாரிக்கும் நானாவதி கமிஷனுக்கு சனிக்கிழமை எழுதியுள்ள
கடிதத்தில் பட் மேலும் கூறியிருப்பது: 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான முக்கிய ஆதாரங்களை மோடி தலைமையிலான மாநில அரசும், கலவரத்தை விசாரிக்க மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவும் அழித்துவிட்டன.
அதிகாரத்தில் உள்ள நபர்கள், சட்டத்துக்கு முன் விசாரணைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் மோசமான இந்த காரியத்தை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக மாநில நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். முக்கிய ஆவணங்களை சமர்ப்பிப்பதில் கமிஷனின் தரப்பில் உருவான காலதாமதம் முதல்வர் மோடிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எதிரான ஆவணங்களை அழிக்க வசதியை ஏற்படுத்தி கொடுத்தது.
முக்கிய ஆவணங்களை குழுநல அக்கறை கொண்டவர்கள்(vested interests) அழிக்கவில்லை என்பது குறித்து உறுதிச்செய்ய வேண்டும் என தனது கடிதத்தில் சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக