செவ்வாய், பிப்ரவரி 07, 2012

ஒரு நாள் சாப்பாட்டுக்கு ரூ.7.80 லட்சம் வரை செலவு செய்யும் அதிபர் !

 பிரான்ஸ் அதிபர் சர்கோசி மிகவும் ஆடம்பரமானவர். ஒரு நாள் சாப்பாட்டுக்கு ரூ.7.80 லட்சம் வரை செலவு செய்கிறார். தனது பேலசில் 121 கார்களை வைத்துள்ளார் என்று எம்.பி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். 
பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி ஆடம்பரமாக செலவு செய்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதிபர் மாளிகை செலவை குறைத்துக் கொள்கிறேன் என்று அவர் பதில் அளித்தார். அத்துடன் அதிபர் மாளிகை விருந்துகளையும் குறைத்து கொண்டார். எனினும் செலவு மட்டும் குறையவில்லை. ஒரு நாள் சாப்பாட்டுக்கு ரூ.7.80 லட்சம் செலவிடுகிறார் என்று சோஷலிஸ்ட் எம்.பி ரெனி டோசிர், தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பணம் என்ற தலைப்பில் ரெனி சமீபத்தில் புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில்தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், சர்கோசி தனது எலிசி பேலசில் 121 கார்களை வைத்துள்ளார். தனிப்பட்ட செலவுக்கும், அதிபர் என்ற முறையில் மேற்கொள்ள வேண்டிய செலவுக்கும் வித்தியாசம் தெரியாமல் பணத்தை வாரி இறைக்கிறார் என்று புத்தகத்தில் ரெனி குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் உள்ள தனது மகன் பியரிக்கு சிகிச்சை அளிக்க தனி விமானத்தில் மருத்துவ குழுவினரை அனுப்பினார் சர்கோசி.

அவர்கள் சென்று மகனை அதே விமானத்தில் அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். இதற்கு லட்சக்கணக்கில் செலவானது என்று குற்றம் சாட்டியுள்ளார் ரெனி. சர்கோசியின் கார்களில் பெரும்பாலானவை மிகப்பெரியது. அதற்கான எரிபொருள் செலவும் அதிகம். அத்துடன் அவரது விமான பயணங்களுக்கு ஆகும் செலவை கணக்கிட்டால் தலை சுற்றும் என்று ரெனி புத்தகத்தில் கூறியுள்ளார். இதனால் பிரான்சில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக