புதன், பிப்ரவரி 08, 2012

ஈரானில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பி பி சி நிருபர்கள் கைது

சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாக லண்டன் பி.பி.சி., செய்தி நிறுவனத்தின் நிருபர்களை ஈரான்அரசு கைது ‌செய்துள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி.பி.சி., நிறுவனம் உலகம் முழுவதும் மக்கள் பேசும் மொழிகளில் செய்திகளை வழங்கி வருகிறது.
அதே போல் ஈரானில் பேசும்
மொழியான பார்ஷி மொழியிலும் செய்திகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் பார்ஷி மொழியில் செய்திகள‌ை வழங்கி வரும் நிருபர்கள் சிலர் சட்ட வி‌ரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறி ஈரான் அரசு கைது செய்துள்ளது என அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பகுதிநேர நிருபர்களின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டு வந்ததாகவும் அவர்களின் நடவடிக்கைகள் சட்டவி‌‌ரோதமாக இருந்ததால் ‌கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த வகையான குற்றம், கைது செய்யப்பபட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் விவரம் போன்றவற்றை வெளியிடவில்லை.
முன்னதாக சட்டவி‌ரோத குற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இரண்டு பி.பி.சி., நிருபர்களை கடந்த அக்டோபர் மாதத்தில்‌ ‌தான் ஈரான் அரசு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக