வியாழன், பிப்ரவரி 02, 2012

எடிசலாட் நிறுவனத்திற்கு 5 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும், பொது நல வழக்கு மையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோர், "மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முன்னர் நிதித்துறை அமைச்சராக பணியாற்றியதால்  அவரையும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சேர்க்க வேண்டும்.
இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் சிபிஐ விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழு கண்காணிக்க உத்தரவிட வேண்டும்" என கோரி 
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு து இன்று நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரை கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது

அத்தீர்ப்பில், 6 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. அந்த 6 நிறுவனங்களில் எடிசலாட், யூனிநார் ஆகிய நிறுவனங்களுக்கு தலா ரூ 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லூப், எஸ்-டெல், அல்லையான்ஸ் மற்றும் சிஸ்டெமா ஷியாம் ஆகிய நிறுவனங்களுக்கு தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக