வியாழன், பிப்ரவரி 02, 2012

சட்டமன்றத்திலிருந்து விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட் !

அரசியலில் நுழைந்து சமீபத்தில் முதல் கைது நடவடிக்கையினை சந்தித்த விஜயாகாந்த், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகி முதல் சஸ்பெண்ட் நடவடிக்கையினை இப்போது சந்தித்துள்ளார். சட்டசபையில் நேற்று அ.தி.மு.க- தே.மு.தி.க.வுக்கு பால் விலை, பஸ் கட்டண உயர்வு தொடர்பாக கடும் மோதல் ஏற்பட்டது ஜெயலலிதாவும் - விஜயகாந்தும் விலைவாசி குறித்து நேருக்கு நேர் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தே.மு.தி.க உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பி கொண்டிருந்தனர் இதை தொடர்ந்து சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாகக் கூறி விஜயகாந்த்
உள்ளிட்ட தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்த பிரச்னையை உரிமை மீறல் குழு விசாரிக்கும் என்று பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் நேற்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நடைபெற்ற உரிமை மீறல் குழுக்கூட்டத்தில், பேரவையில் தேமுதிகவினர் நடந்து கொண்ட விதம் குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த முடிவின்படி, 'இந்தக் கூட்டத்தொடர் மற்றும் அடுத்து வரும் கூட்டத்தொடர் சேர்த்து மொத்தம் 10 நாட்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இனிமேல் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டோம் என்ற உறுதிமொழியுடன் கூடிய நிபந்தனையுடன் மற்ற தேமுதிக உறுப்பினர்கள் சபைக்கு அனுமதிக்கப்படுவர்,' சபாநாயகர் கூறினார்.

இதற்கு, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக