வியாழன், பிப்ரவரி 02, 2012

மாட்டு தீவன ஊழல் வழக்கு: 26 பேருக்கு சிறை தண்டனை !

மாட்டு தீவன ஊழல் வழக்கு: 26 பேருக்கு சிறை தண்டனைஉத்தரகாண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் 1990-ம் ஆண்டு கால்நடை துறை அரசு அதிகாரிகள் மற்றும் பலர் மாட்டு தீவன ஊழலில் ஈடுபட்டனர். இதில் சாகிப்கஞ்ச் அரசு கருவூலத்தில் இருந்து சுமார் ரூ.67.49 லட்சம் சுருட்டியதாக 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் நீதிபதி ஜி.கே.சிங், "இந்த ஊழலில் ஈடுபட்ட 26 பேரில், முதல் முக்கிய குற்றவாளியான முன்னாள் கணக்கு அதிகாரி பிரஜ் பூஷண் பிரசாத்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.6 லட்சம் அபராதமும், 9 அதிகாரிகளுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும், தீவன பொருள்கள் அளித்து வந்த மீதமுள்ள 16 பேருக்கு ஒன்று முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது' என்று தனது தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக