பசுபிக் கடலில் பப்புவா நியூ கினியா தீவுகள் அருகில்,அந்நாட்டு நிறுவன கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியதை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.ஸ்டார்ஷிப் நிறுவன கப்பல் ஒன்று சுமார் 350 பயணிகளுடன், பசுபிக் கடலின் கிழக்கு பகுதியில் வைத்து திடீரென விபத்துக்குள்ளாகி கடலில்
மூழ்க தொடங்கியது. மோசமான காலநிலை காரணமாக இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து குறித்து சமிக்ஞைகள் கிடைக்க தாமதமாகியதால் 6 மணி நேரத்துக்கு பிறகே குறித்த பகுதிக்கு மீட்பு குழுவினர் வர முடிந்துள்ளது. இதுவ்வரை 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் மேலும் முடக்கிவிடபட்டுள்ளதாகவும், ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இத்தாலியில் கோஸ்டா கொன்கோர்டியா கப்பல் விபத்துக்குள்ளாகி பல நூற்றுக்கணக்கானோருடன் கடலில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக