வியாழன், பிப்ரவரி 02, 2012

இந்தியா: பெண் குழந்தைகளுக்கு மிக ஆபத்தான இடம் – ஐ.நா !

புதுடெல்லி:பெண் குழந்தைகளுக்கு உலகிலேயே அபாயகரமான இடம் எது? என்று கேள்வி எழுப்பினால் இனி உறுதியாக பதில் கூறமுடியும். ஐ.நா புள்ளி விபரத்தின் அடிப்படையில் ஒரு வயதிற்கும் ஐந்து வயதிற்கும் இடைப்பட்ட பெண் குழந்தைகள் வேதனைகளையும், துயரத்தையும் அனுபவிப்பதில் நமது இந்திய
தேசம் முன்னணியில் உள்ளது.
ஆண் குழந்தைகளை விட ஒரு வயதிற்கும் ஐந்து வயதிற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் 75 சதவீதம் மரணிப்பதாகவும், ஆண்-பெண் மரண சதவீதத்தில் மிக அதிகமான வித்தியாசம் காணப்படும் ஒரே தேசம் இந்தியா என்றும் ஐ.நாவின் அறிக்கை கூறுகிறது.
பெண் குழந்தைகளுக்கு பாரபட்சம் இழைக்கப்படுவதற்கு எதிரான வலுவான எச்சரிக்கையாக இந்த அறிக்கையை ஐ.நா குறிப்பிடுகிறது.
உலகம் முழுவதும் பெண் சிசு கொலைகள் குறைந்தே வருகின்றன. ஆனால், உலகில் பிரசித்திப் பெற்ற நாடுகளான இந்தியாவிலும், சீனாவிலும் இதர நாடுகளை விட பெண் சிசு கொலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போதுமானது அல்ல. 2000-ம் ஆண்டு காலக்கட்டங்களில் 56 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா அறிக்கை கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக