அமெரிக்காவில் SOPA மற்றும் PIPA என்ற புதிய சட்டமூலத்திற்கெதிராக பல இணையத்தளங்கள் அண்மையில் போராட்டம் நடத்தியிருந்தன அதில் முக்கியமாக விக்கிப்பீடியா இணையத்தளம் 24 மணிநேரம் சேவை நிறுத்தம் செய்தது. இவை அனைத்தும் நடைபெற்ற குறுகிய காலத்திற்குள் தற்போது, சட்டவிரோதமாக இணையத்தில் டெலிவிஷன் தொடர்கள் மற்றும்
திரைப்படங்களை வெளியிடுகின்றனர் உட்பட வேறு சில காரணங்களுக்காக பிரபலமான மெகா வீடியோ மற்றும் மெகா அப்லோட் ஆகிய இணையத்தளங்களை அதிரடியாக நிறுத்தியதுள்ளது அமெரிக்க உளவுத்துறையான FBI.
மேலும் காப்பிரைட் செய்யப்பட்ட வீடியோ மற்றும் ஆவணங்களை திருடி வெளியிட்டனர் என்கின்ற குற்றச்சாட்டில் மெகாவீடியோவுடன் தொடர்புடைய 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மெகா அப்லோட் இணையத்தளமானது உலகின் மிகப்பெரிய கோப்பு பகிர்வு தளமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக