பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் பஸ் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ் நிலையத்துக்கு சென்றனர். இதை பயன்படுத்தி ஆம்னி பஸ் நிலையத்தில் பஸ்சே இல்லாமல் சக்தி டிராவல்ஸ் என்ற பெயரில் திடீரென ஒரு டிராவல்ஸ் ஆரம்பித்துவிட்டனர்.
இங்கு வந்த மக்களுக்கு போலியான பயணச்சீட்டும் வழங்கினர். இ-மெயில் மூலமும் பஸ் டிக்கெட் கொடுத்தனர். சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் வாங்கிய 40-க்கும் மேற்பட்ட பயணிகள் 13-ந்தேதி மாலையிலேயே ஆம்னி பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் இரவு 10 மணி ஆகியும் பஸ் வரவில்லை. இதனால் கோபம் அடைந்த பயணிகள் ஆத்திரத்தில் டிராவல்ஸ் ஊழியரிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை.
உரிமையாளர் வருவார் அவரிடம் கேளுங்கள் என்றார். இதனால் பொறுமை இழந்த பயணிகள் கோயம்பேடு போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் இந்த டிராவல்ஸ்சுக்கு பஸ் இல்லை என தெரிய வந்தது. இதனால் ஊழியர் ஜெயசீலனை (வயது 32) கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
தற்போது தலைமறைவாக இருக்கும் டிராவல்ஸ் உரிமையாளர் பிரான்சிஸ் அருள் என்பவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக