ஞாயிறு, ஜனவரி 01, 2012

வட கொரியாவின் நிலையில் மாற்றம் கிடையாது: புதிய அதிபர் அறிவிப்பு


வட கொரி யாவில் தனிப்பெரும் தலைவராக இருந்த கிம் ஜாங் இல் மரண மடைந்ததை தொடர்ந்து, அவரு டைய மகன் கிம் ஜாங் உன், புதிய அதிபராகியுள்ளார். வட கொரியாவுக்கும், தென் கொரியா மற்றும் அதன் நட்பு நாடுகளாக அமெரிக்கா உள் ளிட்ட நாடுகளுக்கும் இடையே பகை நிலவுகிறது. தற்போது, வடகொரியாவின் தலைமை மாறியுள் ளதால் அந்நாட்டின் நிலைமையும் மாறும் என எதிர் பார்க்கப்பட்டது. அதை புதிய அதிபர்
கிம் ஜாங் உன் மறுத்துள்ளார்.
தந்தையின் இறுதிச் சடங்குகள் நடந்த மறுநாளே அவர் விடுத்த அறிக்கையில், `எங்களிடம் இருந்து எந்தவொரு மாற்றத்தையும் எதிர் பார்க்க வேண்டாம். இதை, தென் கொரியாவில் உள்ள பொம்ம லாட்ட பொம்மைகளுக்கும் உல கின் மற்ற பகுதிகளில் உள்ள முட்டாள் அரசியல்வாதிகளுக்கும் உறுதியாக தெரிவித்துக் கொள் கிறோம்' என கூறியுள்ளார்.
தென் கொரியாவுடன் சமாதானத்துக்கு இட மில்லை என்று வட கொரியாவின் சக்தி மிகுந்த ஆட்சி அமைப்பான தேசிய பாதுகாப்பு ஆணை யமும் அறிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக