எண்ணூரில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 600 மெகாவாட் தினறுள்ள மாற்று அனல் மின் நிலையம் ரூ.3,600 கோடியில் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது மின்சாரம் தான். மின்சாரம் தங்கு தடையின்றி அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கா
க முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு பல்முனை உத்திகளை மேற்கொண்டு வருகிறது. உற்பத்தி சார்ந்த மேலாண்மை உத்தியாக நடந்தேறிவரும் மின் உற்பத்தி திட்டங்களை விரைந்து முடிக்கவும், புதிய மின் உற்பத்தி திட்டங்களை தொடங்கவும், மின்பகிர்வு கட்டமைப்புகளை பிரிக்கவும், மின் இழப்பை தடுக்கும் பொருட்டு பகிர்மான அமைப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் எண்ணூரில் தற்போதுள்ள அனல் மின்நிலையத்திற்கு மாற்றாக ஒரு புதிய அனல் மின்நிலையத்தை நிறுவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். எண்ணூரில் 5 அலகுகள் கொண்ட, மொத்தம் 450 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம், 40 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், இங்குள்ள இயந்திரங்கள் செயலிழந்து வருகின்றன. இதனால் இந்த அனல் மின்நிலையம் முழு உற்பத்தித் திறனுடன் செயல்பட இயலவில்லை.
எனவே, எண்ணூரில் 5 அலகுகள் கொண்ட அனல் மின் நிலையத்தில் உள்ள பழைய மின் உற்பத்தி இயந்திரங்களை அகற்றி விட்டு, அதே இடத்தில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் 3600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் 600 மெகாவாட் திறனுள்ள மாற்று எண்ணூர் அனல் மின்நிலையம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த புதிய எண்ணூர் அனல் மின்நிலையம், 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்படத் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக