அதில் கூறியுள்ளதாவது,
கடந்த 2001ம் ஆண்டிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதன்பிறகு டீசல் விலை 137 சதவிகிதமும், உதிரி பாகங்களின் விலை 180 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 6,154 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகாவில் அதிகம்
இந்த இடைப்பட்ட காலத்தில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தாலும் அண்டை மாநிலங்களை விட குறைவுதான். ஆகவே தவிர்க்க முடியாமல் உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் தமிழ்நாடு அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக