புதன், ஜனவரி 11, 2012

இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு: ஷேவாக் காரணமா?


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐநாள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தனது உள்ளரசியல் பிரச்னைகளில் சிக்கித் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே இரண்டு ஐநாள் ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவிடம் மிக மோசமாகத் தோற்றுள்ளது இந்திய அணி. இந்நிலையில் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு அணி வீரர்களுக்கிடையேயான அரசியல் தான் காரணம் என்று ஆஸ்திரேலியப் பத்திரிக்கையான ஹெரால்ட் சன் செய்தி வெளியிட்டுள்ளது.


தற்போது துணைத்தலைவராக இருக்கும் வீரேந்திர ஷேவாக் தலைமைத் தாங்க விரும்புவதாகவும், அவரை  ஒருசில ஆட்டக்காரர்கள் ஆதரிப்பதாகவும், இன்னும் சில ஆட்டக்காரர்கள் மகேந்திரசிங் தோனியையே தலைவர் பொறுப்பில் விரும்புவதாகவும், இவர்களுக்கிடையேயான உள் அரசியல் தான் ஆடுகளத்தில் வெளிப்பட்டு தோல்வியை நோக்கித் துரத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்திய வீரர்கள் தங்களுக்குள்ளேயே போரிட்டு வருகின்றனர். அணியில் ஒற்றுமையில்லை என்றும் இத்தகவலை ஆஸ்திரேலிய வீரர் ரியான் ஹாரிஸ் கூறியதாகவும்  ஹெரால்ட் சன்  பத்திரிகை தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக