காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்பு குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடந்த காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்பு குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாடி,
தலைமை இயக்குனர் வி.கே. வர்மா ஆகியோர்மீது வழக்கு தொடரப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் அவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுமீதான விசாரணையில், டெல்லி உயர்நீதிமன்றம் ரூ. 5 லட்சம் மதிப்புக்குப் பத்திரமும் அதே தொகைக்கு ஈடாக இரு உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல இன்று அவர்களுக்கு உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக