வியாழன், ஜனவரி 19, 2012

குழந்தையைக் காப்பாற்றியது தேவதையா ?

ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தையொன்று, தன்னை கீழே விழாமல் ஒரு தேவதை காப்பாற்றியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் துனியா என்ற குழந்தையே மேற்கண்டவாறு உயிர் தப்பிய பின்னர் கூறியுள்ளது. இக்குழந்தை எகிப்து நாட்டைச் சார்ந்த ரிதா என்பவருடையது. ”மாடியிலிருந்து மிக வேகமாக விழுந்த நான் இடையில் என்னை யாரோ தாங்கிப் பிடிப்பது போல் உணர்ந்தேன்
. கீழே விழும்போது மெதுவாக விழுந்தேன்” என அந்தக் குழந்தை துனியா தெரிவித்துள்ளது. ”என்னை யார் காப்பாற்றியது எனத் தெரியவில்லை, ஆனால் அது நிச்சயமாக ஒரு தேவதையாகத்தான் இருக்க வேண்டும்” என துனியா தெரிவித்துள்ளார்.

துனியாவின் தந்தை ரிதாவும் ”நிச்சயமாக இது கடவுளின் கருணைதான்” என கூறினார். ”அவள் தான் காப்பாற்றப்பட்டதை மிகுந்த ஆச்சர்யத்துடன் அனைவரிடமும் சொல்லிக் கொண்டே இருக்கிறாள்” என மேலும் கூறினார்.

ஜன்னலைத் திறந்து வெளியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது கால் தவறி துனியா கீழே விழுந்துள்ளார். தற்போது, "இனிமேல் ஜன்னல் பக்கமே செல்ல மாட்டேன்" என துனியா பயத்துடன் தெரிவித்துள்ளார். கீழே விழுந்தவுடன் குழந்தையை ஷார்ஜாவில் உள்ள குவைத் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

கீழே விழுவதற்கு சற்று முன்னர் ”அல்லாஹ்” என்ற வாசகம் பொறித்த ஒரு சங்கிலியை துனியாவின் தாயார் அவருக்கு அணிவித்துள்ளார். ”அல்லாஹ்” என்பது கடவுளைக் குறிப்பதற்கான அரபிச் சொல்லாகும். இந்தச் சங்கிலியினால்தான் காப்பாற்றப்பட்டதாக கருதும் துனியா, மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அதனைக் கழற்ற மறுத்துவிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக