சென்னை லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் ரெய்டுகள் மற்றும் வழக்குப் பதிவைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் பதவியிலிருந்து செல்லமுத்து விலகி விட்டார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கடந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். தலைவராக செல்லமுத்து இருந்து வந்தார். 13 உறுப்பினர்களும் உள்ளனர்.
இவர்கள் நிர்வாகத்தில், உதவி பல் மருத்துவர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகவும், பெருமளவில் லஞ்சம் கைமாறியதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சில வாரங்களுக்கு முன்பு செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டன. விசாரணையும் நடத்தப்பட்டது. மொத்தம் 3 முறை ரெய்டு நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து செல்லமுத்து உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் 113 2 மற்றும் 15 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது செல்லமுத்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக