புதன், ஜனவரி 18, 2012

ஆளுநரைக் கடத்திய அல்காய்தா !

அல்ஜீரியாவின் மாகாண ஆளுநர் ஒருவரை அல் காய்தா அமைப்பைச் சார்ந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளனர். லிபிய எல்லை அருகில் இது நடைபெற்றுள்ளதால் லிபிய அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முஹம்மத் லைத் கெல்பி என்பவர் அல்ஜீரியாவின் இல்லிஸி மாகாண ஆளுனராக இருக்கிறார். நேற்று ( 16.01.2012) ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு அவர் திரும்பும்போது ஆயுதம் ஏந்திய மூன்று மனிதர்களால் கடத்தப்பட்டார். அவரது உதவியாளரையும், ஓட்டுனரையும்
விடுவித்த அவர்கள், ஆளுனரை மட்டும் லிபியாவை நோக்கி கொண்டு சென்றதாக தெரிகிறது. கெல்பி பின்பு தனது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற விபரம் தெரியவில்லை.

வட ஆப்ரி்க்காவில் செயல்பட்டு வரும் அல்காய்தா அமைப்பே இதற்கு பொறுப்பு என அல்ஜீரிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  லிபியாவில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் நிலைமையினை அல்காய்தா பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாக அல்ஜீரிய அரசு கருதுகிறது. இதற்கிடையில் ஆளுநர் கெல்பியை பொதுமக்களே பிடித்து அல்காய்தாவிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக