கெய்ரோ:எகிப்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் தெரிவித்துள்ளார். தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கார்ட்டர் செண்டரின் தலைவரான ஜிம்மிகார்ட்டர் கெய்ரோவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை குறிப்பிட்டார். ஹுஸ்னி முபாரக் பதவி
விலகியதை தொடர்ந்து எகிப்தில் நடந்த தேர்தலை கண்காணிக்க ஜிம்மி கார்ட்டர் எகிப்திற்கு வருகை தந்தார். 900 புகார்கள் கிடைத்துள்ளது என குறிப்பிட்ட கார்ட்டர் இவற்றை அரசு தரப்பு வழக்குரைஞரிடம் அளித்துள்ளதாக கூறினார்.‘மக்கள் தேர்தலில் முழுமையாக ஒத்துழைத்துள்ளனர். ஆனால், அதிகாரிகளின் பயிற்சி குறைவு வெளிப்பட்டது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களிடம் ராணுவம் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும்’ என கார்ட்டர் கூறினார்.
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் பிரிவான ஜஸ்டிஸ்அண்ட் ஃப்ரீடம் கட்சியின் தலைவர் முஹம்மது முர்ஸியுடன் ஜிம்மி கார்ட்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக