டெல்லி: கையால் உணவு ஊட்டுவது தவறு என்று கூறி நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் 2 குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அனுருப். அவரது மனைவி சகாரிகா பட்டாச்சாரியா. அவர்களுக்கு 3 வயதில் மகனும், 1 வயதில் மகளும் உள்ளனர். அனுருப் தனது குடும்பத்துடன் நார்வேயில் வசித்து வருகிறார்.
அனுருப் தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு நம் நாட்டு வழக்கப்படி கையால் உணவு ஊட்டியுள்ளனர். இதைப் பார்த்த நார்வே நாட்டு குழந்தைகள் பாதுகாப்பு சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடுப்பாகி விட்டனர்.
ஏனென்றால் அந்த நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு கையால் உணவு ஊட்டுவது பெருந்தவறு. அதனால் அந்த 2 குழந்தைகளையும் பெற்றோரிடம் இருந்து பிரித்து வேறு நபர்களிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். குழந்தைகளைப் பிரிந்து அனுருப் தம்பதியினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
எனது மகன் தனது தந்தையுடன் தூங்குவான். நார்வேயில் அப்படி செய்யக் கூடாதாம். எனது கணவர் தனியாகத் தான் தூங்க வேண்டுமாம் என்று சகாரிகா தெரிவித்தார்.
இந்திய கலாச்சாரப்படி குழந்தைகளுக்கு கையால் உணவூட்டுவது வழக்கம். ஆனால் இங்கு கையால் உணவூட்டினால் அது குழந்தையைக் கட்டாயப்படுத்தி உண்ண வைப்பதாம் என்று அனுருப் தெரிவி்த்தார்.
அனுருப் தம்பதியினரை அவர்கள் குழந்தைகளைக் கூட பார்க்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்லோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த குழந்தைகளை சந்தித்தார்.
இதற்கிடையே வரும் மார்ச் மாதத்துடன் அனுருப்பின் விசா காலம் முடிகிறது. அதற்குள் குழந்தைகள் கிடைக்கவிட்டால் அவர்கள் விசாவை புதுப்பிக்கத் தான் வேண்டும்.
இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக