அங்காரா:அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான குடியரசு கட்சியின் வேட்பாளர் பதவிக்காக மிட் ரும்னியுடன் மோதும் டெக்ஸாஸ் ஆளுநரின் துருக்கி குறித்த விமர்சனம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. துருக்கி ‘இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆட்சியின் கீழ் உள்ளது’ என்ற மோசமான விமர்சனம் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள் கூட மிதவாதி என குறிப்பிடும் ரஜப் தய்யிப் எர்துகானின் ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் கட்சியை பயங்கரவாத கட்சியாக முத்திரைக் குத்தும் டெக்ஸாஸ் ஆளுநர் ரிக் பெர்ரி மன்னிப்பு கோரவேண்டும் என அமெரிக்காவில் உள்ள துருக்கி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தனது தெளிவான அறியாமையை பெர்ரி வெளியிட்டுள்ளார். நேட்டோ கூட்டணியில் உள்ள துருக்கியை குறித்து கவனமற்ற விமர்சனங்களை கூறக்கூடாது என துருக்கி அமைப்புகள் கூறியுள்ளன. பெர்ரி ஒரு பாரம்பரிய முட்டாள் என துருக்கியில் ஹுர்ரியத் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இத்தகைய மோசமான கருத்துக்களை தவிர்க்க அமெரிக்க தலைவர்கள் கவனமாக இருக்கவேண்டும் என துருக்கி அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக