வியாழன், ஜனவரி 19, 2012

கண்களின் அழகை பாதிக்கும் கருவளையம் : எளிதில் போக்க டிப்ஸ்!

Eye Care
 முகத்திற்கு முத்தாய்ப்பாய் அழகை தருபவை கண்கள். அந்த கண்களில் ஏற்படும் சோர்வு முக அழகையே மாற்றிவிடும். கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் கண்களின் அழகை பாதித்துவிடும். எனவே கண்களை கவனமாக பாதுகாக்க வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

உடல் உஷ்ணம்

உடல் உஷ்ணம் நேரடியாக கண்களை பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலை தரும். கண்களை குளிர்விக்க ஐஸ் தண்ணீரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையை கண்களை மூடி பத்து நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை பளீர் என்று பிரகாசிக்கச் செய்ய ஒரு பஞ்சு உருண்டையை பன்னீரில் நனைத்து மூடிய கண்களின் இமைகள் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

புத்துணர்ச்சி தரும் தண்ணீர்

ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை புத்துணர்வு பெறச்செய்ய, ஒரு கிண்ணத்தில் நீர் நிரப்பி அதை கண்ணோடு ஒட்டி வைத்து இந்தக் கரைசலுக்குள் விழியை முக்கி கண்களைத் திறந்து, கண் விழியை இடமும், வலமும், மேலும் கீழுமாக உருட்டவும், இது கண்களில் உள்ள அழுக்கு, தூசு போன்றவற்றை அகற்றிவிடும்.

அழகை பாதிக்கும் கருவளையம்

கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். தூக்கம் குறைவாக இருந்தாலே கருவளையம் ஏற்படும். அதிகமான கணினி பயன்பாடும் கருவளையம் தோன்ற காரணமாகும். எனவே 7 மணி நேரம் தூக்கம் அவசியம். உணவில் கீரை வகைகளை சேர்க்கவேண்டும். வைட்டமின் எண்ணெய் வைத்து கண்ணை சுற்றி மசாஜ் செய்வதும் கருவளையத்தைப் போக்கும்.

பளிச் பாதாம் பருப்பு 

கண்களுக்குக் கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க, தினமும் உருளைக் கிழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்டவின் கழுவ வேண்டும். பாதாம் பருப்பை ஊறவைத்து பால் விட்டு அரைத்து அந்த விழுதை கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் மறையும்.

வசீகரிக்கும் ஆரஞ்சு

கண் வசீகரத்திற்கும், உடல் அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் ஏற்றது. தூக்கமின்மையை போக்கி கண்களை புத்துணர்ச்சியாக்கும் தன்மை ஆரஞ்சுக்கு உண்டு. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃப்ரீசரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆன உடன் அதை மெல்லிய துணியில் கட்டி வைத்து, கண்ணுக்கு மேல் ஒற்றி எடுக்கவேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வர கண்கள் பளிச் ஆகிவிடும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்து சிறிது நேரம் ரிலாக்ஸாக உறங்குவது கண்களின் கருவளையத்தைப் போக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக