ஜப்பானில் கடந்த வருடம் ஏற்பட்ட பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள சுமார் 10,000 தாய்மார்களின் தாய்ப்பாலை அணுக்கதிர்வீச்சு சோதனைக்குட்படுத்த ஜப்பானிய அரசாங்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
புகுஷிமா பிராந்தியத்திலுள்ள அணு உலையில் ஏற்பட்ட கதிர்வீச்சு காரணமாக அப்பகுதியிலுள்ள புதிய தாய்மார்களின் தாய்ப்பாலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்பதை அறிவதற்காக இப் பரிசோதனை
மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த வருடம் மார்ச் 11 ஆம் திகதி ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் சுமார் 15,000 பேர் பலியாகினர்.
இப்பூமியதிர்ச்சியானல் புகுஷிமா அணுஉலையும் பாதிப்பிற்குள்ளாகி அணுக்கதிர்வீச்சு கசிவும் ஏற்பட்டது.
எனினும் இப்பரிசோதனை நடவடிக்கை குறித்த விபரங்கள் இன்னும் பூர்த்த்தியாக்கப்படவில்லையென புகுஷிமா பிராந்திய அரசாங்க பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் இத்தாய்மார்களிடமிருந்து தாய்ப்பால் மாதிரிகள் பெறப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
புகுஷிமா அணுஉலையில் ஏற்பட்ட கசிவினால் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதற்காக அப்பகுதி தாய்மார்கள் ஏற்கெனவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புகுஷிமா பிராந்தியத்தில் வருடாந்தம் சுமார் 18,000 குழந்தைகள் பிறக்கின்றன. அரசாங்கத்தின் தகவல்படி அவற்றில் அரைவாசி குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டப்படுகின்றது.
எனினும் மேற்படி கதிர்வீச்சின் பின்னர் எத்தனை தாய்மார்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர் எனத் தெரியவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக