புனே: உடல் நிலை பாதிக்கப்பட்டு அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் அவரது குழுவின் திட்டமும் முடங்கிப் போயுள்ளது. வலுவான லோக்பால் மசோதா கோரி ஹசாரே 2 முறை உண்ணாவிரதம் இருந்தார். ஆனால்
அவரது கோரிக்கைகளை மத்திய அரசும் எதிர்க் கட்சிகளும் சேர்ந்து முடக்கிவிட்டன. ஒருவரை ஒருவர் குறை கூறியபடி, பலமில்லாத லோக்பால் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் அது கூட நடக்கவில்லை. மசோதா மீது விவாதம் நடந்து கொண்டிருந்தபோதே கூட்டத் தொடர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந் நிலையில் நாங்கள் கோரியபடி லோக்பால் மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரி ஹசாரே மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். வழக்கமாக டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கும் அவர், இந்த முறை அங்கு குளிர் அதிகமாக இருந்ததால், மக்கள் வர மாட்டார்கள் என்று அஞ்சி மும்பைக்கு உண்ணாவிரதத்தை மாற்றினார்.
ஆனால், மும்பையிலும் அவரது உண்ணாவிரதத்துக்கு கூட்டமே வரவில்லை. வெறும் 3,000 மட்டுமே கூட, காலியான மைதானத்தைப் பார்த்து வெறுத்துப் போன ஹசாரே உண்ணாவிரதத்தை பாதியிலேயே கைவிட்டுவிட்டு கிளம்பிப் போனார்.
இதையடுத்து உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்யப் போவதாக ஹசாரே அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. காய்ச்சல், சளித் தொல்லையால் அவதிப்பட்ட அவருக்கு மார்பில் தொற்று ஏற்பட்டது. சனிக்கிழமை இரவு அவர் மார்பில் வலிப்பதாக கூறியதால் புனேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்னா ஹசாரே இன்னும் 5 நாட்களில் உடல்நலம் தேறிவிடுவார் என்று டாக்டர்கள் அறிவித்துள்ளனர். அதன் பிறகும் அவர் ஒரு மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந் நிலையில் அன்னா ஹசாரே குழுவினர் கூடி நேற்று ஆலோசனை நடத்தினார்கள். அவர்கள் 5 மாநில தேர்தலில் ஹசாரேவை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தீர்மானித்துள்ளனர். எனவே 5 மாநில தேர்தல்களில் ஹசாரே பிரசாரம் செய்ய மாட்டார் என்று தெரிகிறது.
ஹசாரே பிரச்சாரம் செய்யாத நிலையில் அவரது குழுவினரைச் சேர்ந்தவர்களான அரவிந்த் கெஜரிவால், கிரண் பேடி ஆகியோர் பிரச்சாரம் செய்யலாம் என்று தெரிகிறது. ஆனால், இவர்களுக்கு மக்களிடையே பெரிய அளவில் ஆதரவு இல்லை என்பதால் இவர்களது பிரச்சாரம் எந்த அளவுக்கு எடுபடும் என்பது தெரியவில்லை.
இந்த மாநிலங்களில் ஹசாரேவின் பிரச்சாரத்தை வைத்து கரை சேர்ந்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பாஜக பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக