ஞாயிறு, ஜனவரி 15, 2012

பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்! அமெரிக்காவில் அதிரடி அறிமுகம் (வீடியோ இணைப்பு உள்ளே)


எங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை இலகுவாக எடுக்கலாம் என்பது மட்டும் தான்.
ஆனால் அமெரிக்காவில் இதையெல்லாம் விட ஒரு படி தாண்டிப் போய் ஏ.டி.எம் மூலம் இன்னொரு புதிய விடயத்தையும் சாதித்துள்ளனர்.
ஆம், உங்களிடம் இருக்கும் பழைய செல்போனை ஏ.டி.எம் இல் செலுத்தி அதற்குரிய பணத்தை உடனே பெற்றுக் கொள்ளலாம்.
செல்போன் மட்டுமில்லை... பழைய mp3 பிளேயர்கள், ஐ போன் போன்றவற்றுக்கும் பணத்தினைப் பெற முடியும்.

அமெரிக்காவில் உள்ள பிரபல நகரான Las Vegas இல் இடம்பெற்ற சர்வதேச எலக்ரோனிக் வாடிக்கையாளர் கண்காட்சியில் தான் குறித்த ஏ.டி.எம் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடுதிரையுடன் கூடிய ஏ.டி.எம் இயந்திரத்தின் முன்பக்கத்தில் செல்போனை வைத்தால் அதனை ஸ்கான் பண்ணி அதன் விலையை எளிதாக மதிப்பிட்டு விடும்.
இது ஒரு சூழல் பாதுகாப்பு திட்டமாகவும் நோக்கப்படுகின்றது. பல்வேறு செல்போன் நிறுவனங்களுடனும் தொடர்புபட்டிருப்பதால் ஏ.டி.எம் மையங்கள் மூலம் சேகரிக்கப்படும் பழைய செல்போன்கள் மீள் சுழற்சிக்கு உள்ளாவது எளிதாக்கப்படுகின்றது.

 
Read More news

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக