செவ்வாய், ஜனவரி 03, 2012

கடவுள் துகள் குறித்த ஆய்வுக்காக தமிழகத்தில் ஆய்வகம் : பிரதமர் அறிவிப்பு


பிரபஞ்சம் உருவாகக் காரணமாயிருந்த "கடவுள் துகள்கள்" எனப் பெயரிடப்பட்ட அடிப்படை துகள்க குறித்த ஆராய்ச்சிக்காக இந்தியாவில் ரூ.1350 கோடி செலவில் ஆய்வகம் ஒன்று தமிழகத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். புவனேஷ்வரில் 99வது இந்திய அறிவியல் மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது அவர், "கடந்த சில ஆண்டுகளாக
அறிவியல் துறையில் இந்தியாவின் நிலை வீழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் சீனா போன்ற நாடுகளால் பின்னுக்கும் தள்ளப்பட்டுள்ளோம். இந்நிலையினை மாற்ற நாம் பாடுபடவேண்டும்.
இந்திய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான செலவைத் தற்போதுள்ள உள்நாட்டு உற்பத்தியின் ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அறிவியல் ஆராய்ச்சியானது மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் பாதுகாப்பை எதிர்நோக்கி இருக்க வேண்டும். அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தொழிற்துறைகள் மூலம் விரிவாக்கப்பட்ட முதலீட்டை உறுதி செய்ய வேண்டும்.
பிரபஞ்சம் உருவாகக் காரணமாயிருந்த அடிப்படை துகள்கள் குறித்து ஆராய தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் ரூ.1350 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது."
என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக