சனி, ஜனவரி 14, 2012

அச்சுதானந்தனும் நில அபகரிப்பு வழக்கில் சிக்கினார் !


அச்சுதானந்தனும் நில அபகரிப்பு வழக்கில் சிக்கினார்!அரசியல்வாதிகளின் நில அபகரிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டின் திமுக பிரமுகர்கள், கர்நாடகாவின் எடியூரப்பா என்று செய்திகளாகி, இப்போது கேரள முன்னாள் முதல் அமைச்சர் அச்சுதானந்தனும் சிக்கியுள்ளார்.
அச்சுதானந்தன் முதல்வராக இருந்த போது நேரடியாக தலையிட்டு உத்தரவு பிறப்பித்ததால் அச்சுதானந்தத்தின் உறவினர் சோமன் என்பவருக்கு அவரது ஆட்சியின் போது காசர்கோடு மாவட்டத்தில் 2.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சோமனுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதுடன் விற்பனை உரிமையும் அளிக்கப்பட்டது.


இந்த விவகாரம் தொடர்பாக கேரள இலஞ்ச ஒழிப்புத் துறையில் முறையிடப்பட்டுள்ளது.

தற்போது ஆட்சி மாறியதும் இம் முறையீடு குறித்து விசாரணைக்கு தற்போதைய கேரள முதல் அமைச்சர் உம்மன்சாண்டி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இலஞ்சஒழிப்பு காவல்துறை அச்சுதானந்தனை முதல் குற்றவாளியாக சேர்த்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான மனு இன்று கோழிக்கோடு இலஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக